அனோஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அனோஜன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 19-Aug-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 6 |
நான் கவிதை எழுத மிகவும் ஆர்வம் உள்ளவன், ஆனால் அதற்க்கான அடிப்படை அறிவு எனக்கு இல்லை, என்னால் முடிந்தவரை தமிழில் நல்ல கவிதைகள் எழுதவே முயல்கிறேன். சிறு சிறு பாடல் வரிகளும் எழுதுயுள்ளேன் வரும் நாட்களில் என் படைப்புகள் உங்கள் பார்வைக்கு வரும். நன்றி
கண்ணில் பல பெண்கள் கண்டும்
கடந்து வந்து என்னை சேர்ந்தாய்!
கனவில் கண்ட அத்தனை குணமும்
கலந்து வந்து என்னில் கலந்தாய்!
நிமிர்ந்த நடையில் வீரம் சேர்த்து
வின்னை ஆளும் தோற்றம் தந்தாய்!
மண்ணை பார்த்து நடந்த என்னை
உன்னை பார்த்து நடக்க செய்தாய்!
எந்தன் முகம் வாடினால் போதும்
ஓடி வந்து ஏந்தி கொள்வாய்!
எந்தன் முகத்தில் புன்னகை மலர
யுக்திகள் பல கையாளுவாய்!
குறும்பு சிரிப்பில் காந்தம் வைத்து
என்னை கவர்ந்த மாயக்கண்ணா!
உந்தன் அணைப்பில் வாழ ஏங்கும்
நானும் ஓர் பேதை பெண்ணே!
தாய் அன்பில் கண்ட சொர்க்கம்
கலைந்து போனால் ஏக்கம் கொள்வேன்,
உந்தன் அன்பில் கண்ட சொர்க்கம்
கனவாய் போனால் என்னை கொல்வேன
கண்ணில் பல பெண்கள் கண்டும்
கடந்து வந்து என்னை சேர்ந்தாய்!
கனவில் கண்ட அத்தனை குணமும்
கலந்து வந்து என்னில் கலந்தாய்!
நிமிர்ந்த நடையில் வீரம் சேர்த்து
வின்னை ஆளும் தோற்றம் தந்தாய்!
மண்ணை பார்த்து நடந்த என்னை
உன்னை பார்த்து நடக்க செய்தாய்!
எந்தன் முகம் வாடினால் போதும்
ஓடி வந்து ஏந்தி கொள்வாய்!
எந்தன் முகத்தில் புன்னகை மலர
யுக்திகள் பல கையாளுவாய்!
குறும்பு சிரிப்பில் காந்தம் வைத்து
என்னை கவர்ந்த மாயக்கண்ணா!
உந்தன் அணைப்பில் வாழ ஏங்கும்
நானும் ஓர் பேதை பெண்ணே!
தாய் அன்பில் கண்ட சொர்க்கம்
கலைந்து போனால் ஏக்கம் கொள்வேன்,
உந்தன் அன்பில் கண்ட சொர்க்கம்
கனவாய் போனால் என்னை கொல்வேன
உடல் தந்து, உயிர் தந்து,
உணவளித்து, உணர்வளித்து,
செல்லும் இடமெல்லாம் சிறப்பாய்
சித்தரித்து, சிலையினும் மேலாக
சிற்பமாக செதுக்கி, தன்னலம்
கருதாமல் அனைத்தையும் அள்ளி
தந்து, வயதான போதிலும்,
இடையூறாக இருக்க கூடாதென்று,
முதியோர் இல்லம் சென்று, தன்
வாழ்நாள் முழுவதும் தன் பில்லைகளுக்காகவே
வாழ்ந்து தன் வாழ்வை முடித்து கொள்ளும்
இந்த பூவுலக தெய்வமே, உனக்கு மகனாக பிறந்ததை
எண்ணி பெருமை கொள்கிறேன்....
பிள்ளை என்று நடப்பானோ ?
பின்னாலேயே நடக்கின்றாள் ;
தாய் மனதின் தவிப்புகளோ ;
ஏக்கத்திலே காத்திருப்பு !
பருவமழை தொடராதோ ;
பள்ளி விடுப்பும் தொடராதோ;
காத்திருக்கும் மாணவனின் -
காத்திருப்பு எல்லாமே ;
கவலையன்றி வேறில்லை !
வயதும் கடந்து செல்கிறது ;
வாழ்க்கையும் தொடங்கவில்லை !
தினம் தினமும் காத்திருப்பு ;
திருமண நாளும் எப்போ என்று !
குட்ட குட்ட குனிகின்றேன் ;
குடும்பம் நினைத்து போகின்றன் !
சோகம் மறைத்த காத்திருப்பும் ;
சொந்தகாலில் நிற்கவேண்டி !
காலத்தின் மேல் பழிபோட்டு ;
காத்திருப்பதெல்லாமே ;
எனைப்பற்றி அறியணும் !
எல்லோரும் மனதிலும் பதியனும் !
கருவறையில் வளர்ந்து நிற்கும் மழலையே
உந்தன் வரவை எண்ணி இங்கே உந்தன் அன்னை காத்து நிற்கிறாள்!
உந்தன் சிறு பாதம் உலகை அளக்க புறப்பட வளர்ந்து விட்டது!
உந்தன் கைகள் உந்தன் அன்னையை தழுவி அணைக்க துளிர்த்து நிற்கின்றது!
உந்தன் கண்கள் பூ உலகின் வனப்பை ரசிக்க போகின்றது!
உந்தன் வாய் (குரல்) நந்தவனத்தின் பட்சிகளை போல அழகாய் பாட போகின்றது!
உந்தன் ஒவ்வொரு உருப்பம் இந்த பரந்த உலகை தவழ்ந்தும், நடந்தும், ஓடியும் கடக்க போகின்றது!
இவற்றை எல்லாம் நீ நடத்துவதற்கு என்னும் சில காலமே உள்ளது!
அதுவரை உந்தன் அன்னையின் கரு என்னும் காவி மெத்தையில் துயிளுடன் ஓய்வெடுப்பாய் எங்கள் செல்வமே!

கண் இமைக்கும் நேரத்தில் கண்களால் கைது செய்தாய் !
உறங்க போகும் இமைகளை உறங்காமல் விழிக்கச்செய்தாய் !
விழிக்கச்செய்த விழிகளை உன்னை விடாமல் ரசிக்கச்செய்தாய் !
ரசித்து கொண்டிருக்கும் நேரம் காதருகே ரகசியம் சொன்னாய் !
ரகசியம் கேட்ட காதுகளை இன்னிசையால் ஒலிக்கச்செய்தாய் !
இன்னிசையால் எனை மறக்க நெருங்கி வந்து நெகிழச்செய்தாய் !
நெகிழ்ச்சியடைந்த உடம்பினிலே சிறு விரலால் மயக்கம் தந்தாய் !
மயங்கி போகிறேன் நான் மீண்டும் என்னை மீழச்செய்வாயா?

உன் அன்பு என்னும் பூஞ்சிறையில்
என்னை அடைத்து ஆயுள் கால தண்டனை அளித்தாய் ,
எனக்காக கடவுளே வந்து வாதாடினாலும், என் தண்டனையை குறைத்து விடாதே - என் அன்பே
பின் என் ஜீவன் மரணத்தை நோக்கி பயணிக்கும்!