மீண்டும் என்னை மீழச்செய்வாயா
கண் இமைக்கும் நேரத்தில் கண்களால் கைது செய்தாய் !
உறங்க போகும் இமைகளை உறங்காமல் விழிக்கச்செய்தாய் !
விழிக்கச்செய்த விழிகளை உன்னை விடாமல் ரசிக்கச்செய்தாய் !
ரசித்து கொண்டிருக்கும் நேரம் காதருகே ரகசியம் சொன்னாய் !
ரகசியம் கேட்ட காதுகளை இன்னிசையால் ஒலிக்கச்செய்தாய் !
இன்னிசையால் எனை மறக்க நெருங்கி வந்து நெகிழச்செய்தாய் !
நெகிழ்ச்சியடைந்த உடம்பினிலே சிறு விரலால் மயக்கம் தந்தாய் !
மயங்கி போகிறேன் நான் மீண்டும் என்னை மீழச்செய்வாயா?