பள்ளி நினைவு

கருவில் கிடைத்த தாயின் நேசம்...
கைப்பிடித்து நடந்த தந்தையின் பாசம்...
சண்டையிடும் உறவின் உணர்வும்...
தனித்தனியாய் கிடைத்த வாசங்கள்...
உன்னால்....
ஒன்றாய் கிடைத்தது சுவாசமாய்...
பள்ளியெனும் உன்னில்...
கற்றிட வந்தேன் கல்வியறிவை..
நீ என்னில்...
கற்று தந்ததோ வாழ்வின் அறிவை..
இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு...
நம்பிக்கையொன்றை என்றும் வைத்து...
முயன்று பார்..
முடிவு உன் கையில்...
ஊக்கம் தந்த...
உன்னத உலகம் நீ...
இன்று...
கண் கலங்கினாலும்...
என் மனம் துடித்தாலும்...
தாயன்பின் பரிவாய்...
உன் நினைவு...
என் நினைவை மாற்றும்...
வரம் நான் என்ன சொல்ல..
தவமாய் நானிருக்கேன் உன் நினைவில்...

எழுதியவர் : (18-Feb-16, 3:26 pm)
பார்வை : 136

மேலே