அன்புக் கணவா

கண்ணில் பல பெண்கள் கண்டும்
கடந்து வந்து என்னை சேர்ந்தாய்!
கனவில் கண்ட அத்தனை குணமும்
கலந்து வந்து என்னில் கலந்தாய்!
நிமிர்ந்த நடையில் வீரம் சேர்த்து
வின்னை ஆளும் தோற்றம் தந்தாய்!
மண்ணை பார்த்து நடந்த என்னை
உன்னை பார்த்து நடக்க செய்தாய்!
எந்தன் முகம் வாடினால் போதும்
ஓடி வந்து ஏந்தி கொள்வாய்!
எந்தன் முகத்தில் புன்னகை மலர
யுக்திகள் பல கையாளுவாய்!
குறும்பு சிரிப்பில் காந்தம் வைத்து
என்னை கவர்ந்த மாயக்கண்ணா!
உந்தன் அணைப்பில் வாழ ஏங்கும்
நானும் ஓர் பேதை பெண்ணே!
தாய் அன்பில் கண்ட சொர்க்கம்
கலைந்து போனால் ஏக்கம் கொள்வேன்,
உந்தன் அன்பில் கண்ட சொர்க்கம்
கனவாய் போனால் என்னை கொல்வேன்,
இத்துனை வருடம் தனிமையில் கடந்தும்
கலங்கவில்லை இந்த பெண்மை
சிறிது நேரம் பிரிந்தால் கூட
ஏங்கி தவிக்கிது எந்தன் நெஞ்சம்
எந்தன் மனதில் புதைந்த கணவா
காலம் முழுதும் உன்னுடன் வாழ்வேன்
காலன் வந்து அழைத்தால் மட்டும்
உன்னை விடுத்து தனிமையில் போவேன்....

எழுதியவர் : அஜன் (அனோஜன்) (4-Mar-16, 11:21 am)
பார்வை : 229

மேலே