வேண்டாமே பொய் காதல்
படிக்கின்ற வயசு இது காதலிக்காதே..எல்லாம்
முடிச்சிபுட்டு விட்டுடுவான் தெருவில் நிக்காதே..
ஹார்மோன்கள் செய்கின்ற தாறுமாறு வேலை.நீ அதுபேச்ச கேட்டுபோனா போயிடுவ மேல.
இனிக்க,இனிக்க பேசிடுவான் அவன் வளையில் நீ மாட்ட.
மணிக்கணக்கா காத்திருப்பான் போலி அன்பை காட்ட.
பொய்க்காதல் கொண்டு அவன் ராட்டினமா சுத்துவான்.
மெய்யாலும் தண்ணிபோட்டு கேவலமா கத்துவான்.
நாளும் ஒரு சட்டை போட்டு நாகரீகம் காட்டுவான்.
ஆளுகொஞ்சம் அசந்துபோனா ரீலு ரீலா ஓட்டுவான்.
நீ மடங்கும் வரை அடங்காதபுயலைபோல இருப்பான்.
நீ மடங்கி புட்டா தீயை போல நாளும் வாட்டி வதைப்பான்.
விழி இரண்டில்காதல் வலை வீசிடுவானே..
விழியில் நின்று நல்லவனாய் பேசிடுவானே..
அலையும் மனச அடக்கி நீ அடங்கி இரு வீட்டுக்கு..
படிச்சி பல பட்டம் வாங்கி புகழ் சேரு நாட்டுக்கு.
காதல் வலி வேண்டாமடி கண்ணே..
நீ விழுந்து புட்டா வாழ்க்கை பலி பெண்ணே...