கல்பனா அல்பனா

ஏய்யா உம் மனைவிக்கு இரட்டைப் பெண் கொழந்தைங்க பொறந்திருக்கறதா கேள்விப்பட்டேன். எல்லாம் நலந்தானா?

@

மூணுபேருமே நல்லாருக்காங்கய்யா.

@
அவுங்கள வந்து பாக்க நேரமில்லாம போயிருச்சு. அடுத்த வாரம் கண்டிப்பா என் மனைவியை அழைச்சிட்டு வர்றேன். கோவிச்சிக்காதய்யா.
@
சரிய்யா. இதுலெ கோவிச்சிக்கறதுக்கு என்ன இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் பல வேலை.
@
சரி கொழந்தைகங்களுக்குப் பேரு வச்சிட்டீங்களா?
@
வச்சுட்டமே. தற்கால தமிழர் நாகரிகப்படியும் சினிமா ரசனைப்படியும். மூத்தவளுக்கு கல்பனா- ன்னும் இளையவளுக்கு அல்பனா -ன்னும் இந்திப் பேருங்கள மருத்துவமனையிலேயே பதிவு பண்ணிட்டோம்.
@
கல்பனா - அல்பனா - இந்தப் பேருக்கெல்லாம் என்னய்யா அர்த்தம் ?
@
யாரய்யா இந்தக் காலத்திலே அர்த்தம் தெரிஞ்சிட்டு பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கறாங்க? இந்திப் பேரா இருந்தாப் போதும் அது தான் கவுரவம்.

@
நீ சொல்லறதும் சரி தான். நம்ம தமிழ்ச் சமுதாயமே சினிமா ரசனையில முழுகிக் கெடக்குது. நாம என்ன செய்யறது. நல்ல தமிழ்ப் பேரா வச்ச பிள்ளைகளை ஆசிரிய ஆசிரியைகளே ஒரு மாதிரியாப் பாக்கறாங்க. அவங்களலேயே 90%க்கு மேல் தீவிர சினிமா ரசனையுள்ளவங்களா இருக்காங்க. அப்பறம் தமிழ் சீரழியாம இருக்குமா?

#############?#?????????????????
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர் அறிய
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ###
கல்பனா = கற்பனை
---------------------
அல்பனா = அழகான
--+++++------------

எழுதியவர் : மலர் (28-Feb-16, 12:52 pm)
பார்வை : 230

சிறந்த நகைச்சுவைகள்

மேலே