யார் அறிவர் என்னை நீ இன்றி போனால்

அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் தாய்மை
பத்து மாதம் அவன் பதுமையையும்
பின் மொத்த மாதமும் பூத்த பச்சிளம் மகவையும்
பிறகும் போது சிசுவின் வலி அடைகிறாய்
பிறகும் முன் சிசுவிற்கான வழி செதுக்குவேன்
உருளும் போது வயற்றில் அரும்பின் சுகம் காண்கிறாய்
உருண்டு விளையாட என் வாரிசிற்கு சொந்த இடம் தேடுவேன்
கருவறையில் தளிரின் வளர்சிக்கு ஆகாரம் தருவாய்
வகுப்பறையில் ஒளிரும் வளர்சிக்கு ஆதாரம் தேடுவேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் அழுகை
சிறு மொட்டு
வாடிய போது
வயற்றில் சுமந்ததை நினைத்து அழுதாய்
மனதில் சுமந்ததை நினைத்து அழுதேன்
கனவுகள் கலைந்ததென அழுதாய்
கனவே இன்றி காற்றில் உறைந்தேன்
உனக்கு வாழ்த்துக்கள் சொல்ல மறந்தேன் என்றாய்
எனக்கு வாழ்கையே நீ தான் என்பதை மறந்து
உனக்காக கடல் கடந்த எந்தன் நேரத்தை
உன்னோடு களிக்க முடியாமல் போனதேன்
இறைவா
வரம் அளித்த நீ
ஏன்
அதன் வேளையில்
மாற்றம் படைத்தாய்
இன்று வரம் இருக்கிறது
ஆனால்......
அகிலம் அறியவில்லை
ஆணின் மனது....
மன்னிக்க வேண்டுகிறேன்
இனி மன்றி வேண்டுகிறேன்
மறக்க அல்ல
மாற்றங்களை ஏற்றிட ....

எழுதியவர் : ஸ்ரீ (29-Feb-16, 9:29 pm)
பார்வை : 775

மேலே