பட்ஜெட் 2016

அரசியல் வேறு,
அரசாங்கம் வேறு தான்! ஆனால்
ஆளுமை வேறன்று - அதன்
வெளிப்பாடும் வேறன்று!

எண்ணமும் செயலும் நன்றானால்
சொல்லும் பொருளும் வேறாகாதே!

விவசாயிக்கு வேண்டியது என்ன?
வட்டி தள்ளுபடியும் பயிர்க்காப்பீடும்
வங்கி இன்சூரன்ஸ் கம்பெனியின்
கணக்கில் வரவாகும்;
நேற்றை சரி செய்பவர்
நாளைக்கு சரியென்று நினைப்பார்
இன்றினுக்கு எதுவும் செய்ய
ஏனோ முடியவில்லையே?

தற்கொலையில் தள்ளாடும்
விவசாயியின் வாழ்வில்
விளக்கேற்றுமா?

நிஜம் நிழல் நிதர்சனம்
வெவ்வேறு என்றால்
கண்களின் காட்சி பொய்யே!

படித்தவர் சொல்லெல்லாம்
சபையேறி சென்றும் பலனென்ன?
பாவம் விவசாயிக்கு பரிந்து செய்ய
யாருமில்லையே?

இனி ஒரு விதி செய்வோம்!
விவசாயியின் விலாசம் தேடி
விதை உரம் ஊதியம் வழங்கலாம்!
உழைக்கட்டும் அவர், உணவு வழங்குகையில்
உபரியைத்தருவோம் அவர் கையில்.

பஞ்சம் அவரை அண்டாமல், சேதத்தால்
அவர் திண்டாடாமல் இருக்க வேண்டி
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம்
அவர் வாழ்வுக்கு குறைந்தபட்ச ஆதாரம்
கூடுதலாய் கொடுத்தால் கூட்டுங்கள் இன்னும்.

கச்சா எண்ணெய்க்கு மட்டும் தான்
காசள்ளி வீசுகிறார்கள்,
உழவனில்லாத ஒரு நாள் வந்தால்
உங்கள் உணவெங்கே? உயிரெங்கே?
ஊழியம் செய்ய உலகெங்கே?
உணர்வீர்! இங்கே ஒவ்வொருவரும் என்பேன்!
மறுப்பீரோ, நீங்கள் மனம் தொட்டு சொல்லுங்கள்..?

எழுதியவர் : செல்வமணி (1-Mar-16, 9:56 pm)
பார்வை : 56

மேலே