பாடல் -முஹம்மத் ஸர்பான்

(என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா...! என்ற பாடல் ராகத்தில்)

ஆண்-->நெஞ்சில் வந்திடும் கனவுகள் நீதானடி
ஊஞ்சல் கயிறாடும் நினைவுகள் நாமல்லவோ
கண்கள் நீர் சிந்தவே மண்ணில் பூ பூக்குதே
அந்த பூக்களின் முகப்பிலே உனை பார்க்கிறேன்
நான் வனமாகிறேன்

பெண்-->நெஞ்சில் வந்திடும் கனவுகள் நீதானடா
ஊஞ்சல் கயிறாடும் நினைவுகள் நாமல்லவோ

ஆண்-->பனியான காட்டில் மைனாவின் கூட்டில்
நீயும் நானும் தினந்தினம் கதை பேசலாம்.

பெண்-->காதலின் ஆட்சி உலகத்தின் மூச்சில்
மண்ணில் மேலே வானம் வைத்து கனா காணலாம்.

ஆண்-->ஒரு சொல் சொல்கையிலே என் மனம் தொலைந்ததடி
உன் விழி பார்க்கையிலே மெளனம் கொண்டனே
இரு உடலோடு உயிராகி நாம் வாழ்கின்றோம் அடைமழையாகின்றோம்

பெண்-->நெஞ்சில் வந்திடும் கனவுகள் நீதானடா
ஊஞ்சல் கயிறாடும் நினைவுகள் நாமல்லவோ
நிழலோடும் நீதான் என்னோடு வந்தாய்
முள்ளின் மேலே பூக்கள் வைத்து நடைபயின்றோமே

ஆண்-->ரோஜாக்கள் தோட்டம் நீயின்றி போனால்
வானின் மேகம் புல்லின் மேலே உடை மாற்றுமா

பெண்-->முன்பே மழை வந்தால் ரசித்து பார்ப்பனே
இன்று மழை ஓய்ந்தால் உன்னை அணைப்பனே
நான் வாழ்வதும் சாவதும் உன் கையிலே ஆயுள் ரேகையிலே

ஆண்-->நெஞ்சில் வந்திடும் கனவுகள் நீதானடி
ஊஞ்சல் கயிறாடும் நினைவுகள் நாமல்லவோ
கண்கள் நீர் சிந்தவே மண்ணில் பூ பூக்குதே
அந்த பூக்களின் முகப்பிலே உனை பார்க்கிறேன்
நான் வனமாகிறேன்

பெண்-->நெஞ்சில் வந்திடும் கனவுகள் நீதானடா
ஊஞ்சல் கயிறாடும் நினைவுகள் நாமல்லவோ

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (4-Mar-16, 10:01 am)
பார்வை : 119

மேலே