காதல் இதயத்தின் பசி

நான் தொலைகிறேன் காதலின் வானிலே
தொலைந்துமே தேடினேன் உன்னை நான்

இதயத்தில் முதல்முறை பசியைநான் உணர்கிறேன்
உன்விழி காண்பதில் தீருமே பசி . . .

உன் நினைவில் வேர்க்கும் விழிகள்
நாள் கடந்தும் ஒயாதலைகள்

பாவை நான் பார்வை இழந்தேன்
என் விழியில் நுழைந்தாய் . . . அன்பே !


பிறக்கிறேன் தினம்தினம் பூக்களை போலவே
பூமியில் காதலும் பூ தான்

தேனீக்கள் தேன் உண்டு பாரிலே அலையுது
நான் உண்ட தேன் அது காதலித்'தேன்'

மனம் ஒரு அருவியாய் சிந்துதே அன்பையும்
நீ என்ன துறவியா அன்பே

உன் பாதையில் என் காலடி விழுவதே
வரமென வாழ்கிறேன் அன்பே

நீரிலே விழுகின்ற நிலவினை போலவே விழுகிறேன் உன்னில் . . . !!

காலத்தின் சோதனை நீ என்னை அறியலை
நம் வாழ்க்கையின் பாதி வாழ்ந்தேன் நான்

பூக்களே பூக்களே காற்றிலே சேர்க்கையா
கனவில் சேர்க்கிறேன் உன்னோடு நானடா

நித்தம் உன் நியாபகம் செவிகளை அடைத்திட
மனசெல்லாம் ஆசைகள் அன்பே

உன் மேசையின் அமர்ந்துதான் பார்க்கிறேன் நானுமே
காதலில் மேசையும் வானமானதே

தேங்கிய ஆசையை சொல்லிடு நெஞ்சமே சொல்லிடு பெண்மையே . . . !!

( உன் விழிகளில் பாடல் மெட்டில் எழுதப்பட்ட பாடல் வரிகள் ) - நிஷாந்த் ...

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (4-Mar-16, 8:55 am)
பார்வை : 127

மேலே