ஞான வாசிட்டம் - 8

இதுவரை :

பதினொரு உலகியல் துன்பங்களில் ,
செல்வம், ஆயுள், அகங்காரம், மனம் , ஆசை,உடம்பு, பால பருவம், இளமை,
ஆகிய எட்டு துன்பங்கள் பற்றிய இராமனின் சிந்தனைகள் பார்த்தோம்..இனி..
காமம், முதுமை, காலம் பற்றி இராமன் சொல்வதை இந்த பாகத்தில் காண்போம்:


9.காமம்:

பொம்மலாட்டமதில் கயிறு
ஆட்டுவிக்கும் ..
மனித வாழ்வில் காமம்
அலைக்கழிக்கும் ..
இடுகாட்டில் கிடைத்த
சோற்றுருண்டை தனை
குதறிடும் நாயென நமை
சுழற்றி சுழற்றி அடித்திடும்
சூடாக்கும் பொல்லாக் காமம்
வெறும் தசை,
குருதி, நரம்பெனக் காண
இச்சைவெறி நீங்கும்;
ஒழிந்திடும் காமம்.. !

இசைபாடி வரும்
வண்டின் சிறகு அது
எப்போதும் அசையும்
நீக்குதல் அரிதாகும்
அளவறியாது மிஞ்சும்
அல்லலில் கொண்டு சேர்க்கும் !

10: முதுமை :

ஒன்பது வாயில் உடம்பில்
நெகிழ்வும் மறதியும் வந்து சேரும்
முதுமை வர.
நரை கூடும் ..பலம் குறையும்
கடு நோய்க்கு இடமாகும்
உடல் தளர்ந்த தாலே
நகைப்புக்குமிடமாகும்
ஆசை , கட்டை மரத்தில்
வந்தமர்ந்த கழுகு போல ஆகும்
விஷய விருப்பில் களிப்புண்டாகும்
ஈடுகொடுக்க இயலாமை வந்து சேரும்
மூப்பெனும் துன்பமதை
வெல்லுதல் யார்க்கும் அரிதாகும்!

11. காலம்:

அனைத்தையும் புசிக்கின்ற காலன்
வசம் பிழைப்பதில்லை ஒரு ஜீவன்
மொய்த்து ஒலிக்கும் உயிர்கள்
எனும் மரத்தை வளர்ப்பான் காலன்
அதன் கனிகளை அவனே புசிப்பான்
அரிதான ரத்தினங்களையும் காலன்
தாமசம், ராசசம், சத்துவம் எனும்
கயிறுகளில் கட்டிப் பின் அறுத்தெறிவான்
பெருங் கற்ப காலத்தில் வருவான்
காலன் ; விளையும் காலம் ஒரு துன்பம்!

ஆக, பதினோரு உலகியல் துன்பங்கள் பற்றிய இராமனின் சிந்தனைகள் முற்றுப் பெற்றன.

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (4-Mar-16, 6:05 pm)
பார்வை : 1088

மேலே