சீறு தமிழா

உந்தன் உறவை அழித்தனர்
-அதனால் சீறு !

உந்தன் உயிர்கள் கலைத்தனர்
-அதனால் சீறு !

உந்தன் உணர்வை மிதித்தனர்
-அதனால் சீறு !

புலிகள் போல் வளர்ந்த நம்மை !
புழுதியில் வளரும் புட்கள் போல் புடுங்கினர்
-அதனால் சீறு !

பரிகள் போல் வேகம் கொண்ட நம்மை -ஊரும்
பல்லிகள் போல் நசுக்கினர் நரிகள்
-அதனால் சீறு !

இனியாவது சீறு !

தமிழன் ஒன்று பட சீறு !

தமிழினம் வென்றுவிட சீறு !

சீறு தமிழா !சீறு ......................................


எழுதியவர் : இரா .தொல்காப்பியன் (16-Jun-11, 12:29 pm)
சேர்த்தது : r.tholkappian
பார்வை : 479

மேலே