"சுகம்"

இருள் சூழ்ந்த வானத்தில்

நான் மட்டும் மிதக்கின்றேன் !

நித்தம் நான் சுவாசிக்கிறேன்

நிசப்பதத்தை உணர்கின்றேன் !

நீர்மூழ்கி கிடக்கின்றேன்

நின் உணவை பகிர்கின்றேன் !

பால் நிலவும் துணையில்லை

பகலவனும் வருவதில்லை !

நட்சத்திர கூட்டமில்லை

நனைந்தாட மழையில்லை !






இவை கொண்ட இவ்வுலகைகாட்டிலும்


என் தாயின் கருவறை சுகம்தானது !!!.......



எழுதியவர் : thulasi (16-Jun-11, 2:40 pm)
சேர்த்தது : thulasiraman
பார்வை : 386

மேலே