அவள்

அவள் முகம் நான் மறவேன்
சிறிதளவு மகிழ்வோ வருத்தமோ
என் பொற்குவையோ விலையோ
நான் செலுத்த வேண்டும்.

அவள் வேனிற்காலம் பாடும் பாடலோ
இலையுதிர் காலமுடன் வரும் குளிர்ச்சியோ
ஓர் நாளின் அளவுக்குள்ளே வரும்
நூறு வேறுபட்ட பொருட்களோ.

அவள் அழகியோ மிருகமோ
பஞ்சமோ விருந்தோ
ஒவ்வொரு நாளும் சொர்க்கமாகலாம்
அல்லது நரகமோ.

அவள் என் கனவின் கண்ணாடி
அவளது புன்னகையோ புனலின் பிரதிபலிப்பு
அவள் இருக்க மாட்டாள்
சிப்பிக்குள் தோன்றுவது போல.

எப்பொழுதும் கும்பலில் மகிழ்வாகவும்
தனித்தும் பெருமையுடனும் தோன்றும் அவள் கண்களை
யாவர்க்கும் பார்க்க அனுமதியில்லை
அவைகள் அழும்போது.

நீடிக்கும் என்ற நம்பிக்கையில்லாத அவளின் காதல்
கடந்தகால நிழலிலிருந்து என்னிடம் வரலாம்
என நான் நினைந்திருப்பேன்
நான் சாகும் நாள் வரை.

அவளே காரணம் நான் பிழைத்திருப்பதற்கும்
நான் உயிரோடிருப்பது ஏன் எதற்காக என்பதற்கும்
அது ஒன்றே நான் கவனமாயிருக்கிறேன்
கடினமான மழைக் காலத்திலும்.

எனக்கு, அவளின் சிரிப்பையும் கண்ணீரையும் எடுத்து
அவைகளை எனது நினைவுமலராக ஆக்குகிறேன்
அவள் எங்கு சென்றாலும் நானும் அங்கிருப்பேன்
என் வாழ்வின் பொருள் அவள் அவளே... ம்.. ம்.

(UK ல் !974 வருடத்திய பிரபல பாடல் - இயற்றியவர் - Charles Aznavour)

எழுதியவர் : வ க.கன்னியப்பன் (18-Jun-11, 8:56 am)
Tanglish : aval
பார்வை : 451

மேலே