ஸ்வதர்மம்
பகவத் கீதை - 3(35)
***************************
ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண
பர - தர்மாத் ஸ்வம்ஸ் தாத்
ஸ்வதர்மே நிதானம் ஸ்ரேயா
பர - தர்மோ பயாவஹா !
******
தனக்கென்று
விதிக்கப்பட்டது ஒரு கடமை
ஸ்வதர்மம் ..
தவறுடனாகிலும்
அதனைத் தொடர்வதே
மேலானது ..
அதுவன்றி
விதிக்கப்படாத வேறொன்று
பர தர்மம் ..
திறனோடு கூட
அதை செய நினைத்தல்
கொணர்ந்திடும் பெருந்துன்பம் ! .
ஸ்வதர்மம் புரிய
மரணமும் பெரிதன்று ..
மற்றதால் என்றும்
அபாயங்கள் உண்டு !
ஸ்வதர்மம் காப்பது
நலம் ..பலம் ..!
சொந்த சுபாவத்தோடு வாழ் ..
மற்றதால் இருப்பது பாழ் !