காத்து நிற்கின்றேன்........

நெடுஞ் சாலை
பனி மாலை
பௌர்ணமியாய்
வானிலை....


சீறிப்பாயும்
வேகப்பேரூந்து
சிலிர்க்க வைக்கும்
ஜன்னலோரம்......

எதர்ச்சியாய் சற்றும்
எதிர்பாராமல்
எளிதில் மறவாததாய்
எழில் முகம்.....

வளையும் பாதையெல்லாம்
வண்ணமுகம் காண
வலிந்து திரும்பின
வழக்கத்திற்குமாறாக கண்கள்........
திரும்பும் வேளையெலாம்
திகட்டாத இன்ப
திருடிபோல் புன்னகையால்
திருடினாள் என்
திருட்டறியா இதயத்தை...

திருடிச்சென்றவள்
திரும்பி வருவாளென
பார்த்து நிற்கின்றேன்
பாதையோரமாய் காத்துநிற்கின்றேன்........

எழுதியவர் : பு.நிரோஷன் (10-Mar-16, 4:32 am)
Tanglish : kaaththu nirkinren
பார்வை : 65

மேலே