என் வாழ்வில் நீ ஏனடி வந்தாய் 555

அன்பே...

காதல் என்பது இருவழி பாதை என்று
நீ நினைக்கிறாய்...

என் வாழ்வில் அதனால்தான்
நீ வந்து சென்றாயோ...

காதல் எனக்கு ஒருவழி
பாதைதனாடி உயிரானவளே...

அன்பே என் நினைவு
உனக்கு இல்லையா...

எனக்கு பசியெடுக்கும்
நேரங்களில்...

உன் பேர் சொல்லியே
நான் பசியாறுவேனடி...

உன் விழிகாட்டும் திசையில்
நான் நடைபோடுவேனடி...

என்னருகில் நீ இருக்கும்போது நான்
பூந்தேரில் ஏறிப்போக ஆசைப்பட்டேன்...

நான் பித்தேறி சாக
என் வாழ்வில் நீ வந்தாயடி...

பார்வை ஒளிவீசு கண்ணே
என் பார்வை பலமாகும்...

மீண்டும் என்னருகில் வந்து
ஒருவார்த்தை பேசு கண்ணே...

என் வாழ்வு நந்தவனமாகும்...

ஏக்கத்தோடு ஒரு
வாழ்வு எனக்கு உன்னால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Mar-16, 8:59 pm)
பார்வை : 1237

மேலே