கேமரா மேன் கௌதம்

கேமரா மேன்... கௌதம்...
---------------------------------------

"கௌதம்,,,,,!! சீக்கிரம் கிளம்பு.... டைம் ஆறது... அவ்வளவு தூரம் போகவேண்டாமா? " அம்மா பரபரத்தாள்....

" எதுக்குமா இவ்வளவு அவசரப்படுத்தரே? கொஞ்சம் பொறுமையா இரு..." இது கௌதம்...
" உனக்கென்னடா? காலேஜ் சீட் வாங்க நான் படும் பாடு? எனக்குதான் தெரியும்..." அம்மா புலம்பல் ஆரம்பித்ததில் சற்று கோபம் வந்தது கௌதமிற்கு... " நான் ஒன்னும் உன்னை அலைய சொல்லலியே? நீதான் என்னை இன்ஜினியரிங் படிக்க வைக்கணும்னு பாடாய் படறே... எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை புரிஞ்சுக்கோ..

" சும்மா வாயை மூடு... உன் பெரியப்பா பையனைப் பாரு... அத்தை பெண்ணைப் பாரு.. ஏன் ? பக்கத்து வீட்டு முரளி? இவா எல்லோரும் நல்ல படிச்சுட்டு வெளியே வந்து இப்போ நல்ல நிலையிலே இருக்கா? நீ என்ன சினிமா படம் எடுக்கப் போறியா? சும்மா வாயை மூடிண்டு என்னோட வா.." அம்மா சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினாள்.... கௌதம் இனி பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்து கிளம்ப ஆயத்தமானான்...

கௌதம், அப்பா வெளி ஊரில் வேலை... பெரிய சம்பளம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவிற்கு நல்ல வேலையில் தான் இருக்கிறார்.. கௌதமிற்கு ஒரு தங்கை, ஒரு தம்பி....

அம்மாவிற்கு இவன் சிறியவனாய் இருக்கும் பொழுதே இன்ஜினியரிங் படிப்பில் மோகம்.... ஆனால் , ஆரம்பத்தில் இருந்தே கௌதம் இந்த படிப்பை வெறுத்தான்.... அவனுக்கு திரைப்பட துறையில் கேமரா மேனாக போக ஆசை... ஒரு கனவும் கூட... ஒரு படத்தில் , கதை , பாடல் இவற்றை ரசிப்பதில் அதிக கவனம் செலுத்தமாட்டான்... மாற்றாக, கேமரா தொழில் நுட்பம் பற்றியே யோசித்திருப்பான்.... அப்பாவிடம் ஒரு முறை இதை பற்றி பேச..." அடிக் கழுதை ... சினிமாவா? அதெல்லாம் நம்ம வீட்டிற்கு ஒத்துவராது.... ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு... " என்றார்.. அம்மாவோ.. அடிக்கடி சொந்தக்காரர்களிடம் , " என் பையன் இன்ஜினியரிங் படிக்கப்போகிறான் " என்று சொல்லிண்டிருப்பா ....

இதோ, கிளம்பி ஆச்சு... இன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்விற்கு... எல்லாம் எழுதி முடித்தாகி விட்டது....யாரை , யாரையோ பார்த்து எப்படியோ சீட் கிடைத்து விட்டது... அம்மா " அஹ.. ரொம்ப சந்தோஷமா இருக்கு கௌதம்.... நீ நல்லா படி " என்றாள்

" என்னத்தை படிக்கறது? ஒன்னும் பிடிக்கலே... " மனசுக்குள் பொருமினான்...

"என்னால் கட்டாயம் இதை படிக்க முடியாது. என் கவனம் முழுக்க கேமரா தொழிலில் தான்.. என்ன செய்யறது? சீட் வேற வாங்கி ஆச்சு.... அப்பாகிட்ட சொல்லலாமனா, செருப்பாலயே அடிப்பா..." மனதிற்குள் போராட்டம்.... இதை இப்படியே விட்டால் ஊம் ஊம். முடியாது....

"மாமா! நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்... எங்க அப்பா, அம்மா கேட்கலே... தயவு செய்து நீங்க சொல்லுங்கோ ... எனக்கு சுத்தமா இன்ஜினியரிங் படிக்க விருப்பமே இல்லை... சொன்னா புரிந்து கொள்ள மாட்டேங்கறா " அழுதே விட்டான் கௌதம்... தன தாய் மாமனிடம்...
இவருக்கு கல்யாணம் ஆகி விட்டது ஆனால் குழந்தைகள் இல்லை... கௌதம் மேல் தனி ப்ரியம்... இவர் மேல் கௌதம் அப்பாவிற்கு கொஞ்சம் மரியாதை உண்டு... பெரிய பள்ளியில் தலைமை ஆசிரியர்.... கொஞ்சம் கண்டிப்பானவர்...

" நீ முன்னாடியே சொல்லிருக்க வேண்டாமா கௌதம்... இப்ப சீட் வாங்கின அப்புறம் சொல்றியே? " சற்று நிதானமாய் கேட்டார்...

" பயம் தான் மாமா... நானும் சொல்லி பார்த்தேன் அவா கேட்கலே..." தயங்கி பேசினான் கௌதம்...

" சரி நீ ஒன்றும் பேசாதே.. நான் பார்த்துக்கறேன்.." தைரியம் சொன்னார் மாமா...

அன்று மாலை கௌதம் வீட்டில்...

" அவனுக்கு என்ன படிக்க விருப்பமோ அதை படிக்க வைக்கறது தானே நல்லது... பிடிக்காத,, இஷ்டம் இல்லாத ஒன்றை அவன் மேல் திணிப்பது சரி இல்லை... நான் சொல்வதை சொல்லிட்டேன்.. அப்புறம் உங்கள் இஷ்டம்... இன்றைய கால நடப்பையும் மனசிலே வெச்சுக்கோங்கோ.... அவர்களுக்கு இஷ்டம் இல்லாத ஒன்றில் நாம் சேர்த்தால் அது நன்மைல்யில் முடியறது இல்லை.... சிக்கல்தான்.... யோசிங்க..." மாமா தெளிவாய் பேசினார்..

அம்மாவும், அப்பாவும் பலமுறை இரவு முழுவதும் கலந்தாலோசித்தனர்.... மாமா கூறுவது சரி என்று தோன்றியது... மறுநாள் , கௌதம் மற்றும் மாமாவை உடன்வைத்து விவரமாகவும், நிதானமாகவும் பேசினார். கௌதம், தன விருப்பத்தை தெள்ள தெளிவாய் விவரித்தான்....
மாமா -----" அவன் விருப்பம் போல் செய்யட்டும்.. சினிமா தொழில் ஒன்றும் கேவலம் கிடையாது..... கேமரா தொழில்நுட்பம் அற்புதமான கலை... அவன் படிக்கட்டும்.." என்றார்... பெற்றோர் சம்மதித்தனர்...

இன்று கௌதம்.. சினிமாவில் கொடி கட்டி பறக்கிறான்... அம்மா " அட என் பையன் பெரிய காமெரா மேன்... "ஜோடிக் கிளிகள்" படத்தில் இவன்தான் கேமரா மேன்... பாருங்கோ நல்லா இருக்கு.... " பெருமிதத்தில்.....

சந்தோஷ நிலையில் கௌதம்....

மற்றுமொரு கதையுடன் சந்திப்போம்

மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (14-Mar-16, 3:25 pm)
பார்வை : 264

மேலே