10 கட்டளைகள்

10 கட்டளைகள்

நிருபர்: ======அய்யா நீங்க தமிழர் பண்பாட்டுக் கழகம்-ன்னு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சீங்க. அது தொடங்கப்பட்ட ஒரெ மாசத்திலெ ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் உங்க கட்சிலெ சேந்தாங்க. உங்க கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்திட்டு இருக்கும் போதே பாதில செயற்குழு உறுப்பினர் எல்லாம் வெளியேறி ஒரு அறிக்கையை வெளியிட்டாங்க. அது வெளியாகி ரண்டு நாளுக்குள்ளயே உங்களத் தவிர உங்க கட்சிலெ இருந்த எல்லோரும் விலகல் கடிதம் கொடுத்துட்டு வெளியேறிட்டாங்க. அதுக்கு என்னங்க அய்யா காரணம்.
@@@@
தலைவர்:===== நான் அறிவிச்ச 10 கட்டளைகள்தாய்யா காரணம்.
@@@@@
நிருபர்:====== அதென்னங்கய்யா 10 கட்டளைகள்? கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கய்யா?
@@@@@@
தலைவர்:===== அந்தப் பத்துக் கட்டளைகள்::
@@@@@
தமிழர் பண்பாட்டுக் கழகத் தொண்டர்கள்
1. தமிழ்ப் பெயர் கொண்டவர்களாக இருக்கவேண்டும்
2. கலப்பட மொழி பேசி இருமொழி அல்லது மும்மொழிக் கொலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
3. மது அருந்துவோர்க்கும் புகை பிடிப்போர்க்கும் நமது கட்சியில் இடமில்லை.
4. பெண்களைக் கேலி செய்யக் கூடாது
5. பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்வதுடன் எங்கும் விசிலடிக்கக் கூடாது
6. சினிமாவில் பெரும்பாலும் காம உணர்வைத் தூண்டும் அரைகுறை ஆடைகளில் முக்கியக் கதாப்பாத்திரங்கள் அரைகுறை ஆடைப் பெண்கள் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு களியாட்டம் போடும் காதல் கட்சிகளைக் காட்டி, வன்முறை, பழிவாங்கல் கருத்துக்களைத் காட்டுவதால் சினிமாப் பார்ப்பதையும், தொலைக் காட்சித் தொடர்களில் குடும்பங்களைச் சீரழிக்கும் கருத்துக்களைப் பரப்புவதால் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
7. எக்காரணத்தைக் கொண்டு நமது கட்சியினர் வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது.
8. ரவுடிகளுக்கு நமது கட்சியில் இடமில்லை
9. நமது கட்சியினர் கந்துவட்டி கட்டப் பஞ்சாயத்து போன்ற வேலைகளில் ஈடுபடக் கூடாது.
10. கவர்ச்சியால நம் பண்பாட்டைச் சீரழித்து நம்மைச் சுரண்டிப் பிழைப்போர் போல் ஆடை அலங்காரம் எல்லாம் கண்டிபாகத் தவிர்ப்பவரே நம் கட்சியில் தொடர்ந்து இருக்கமுடியும்.

@@@@@@
இதுதாய்யா நான் அறிவிச்சு ஆதரவு கோரிய 10 கட்டளைகள். இந்தக் கட்டளைகளை நான் படித்து முடித்த உடனே எங்க கட்சியில் இருந்த செயற் குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கைகளைத் தட்டிக் கொண்டும் விசிலடித்துக் கொண்டு வெளியேறி உடனே ஒரு நிருபர் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்தின் நலனுக்காக நான் அறிவிச்ச 10 கட்டளைகளும் எல்லா நாளிதழ்கள் மற்றும் தொலைக் காட்சிச் செய்திகளிலும் வெளியாக வச்சுட்டாங்கய்யா. எங்க தொண்டர்கள் எந்த எந்தக் கட்சிக்குப் போனா என்ன லாபம் கெடைக்கும்னு கணக்குப் போட்டு எங் கட்சியை விட்டு விலகிப் போய் வெவ்வேற கட்சிகளிலெ சேந்துட்டாங்கய்யா.

=========மீள் பதிவு

எழுதியவர் : மலர் (14-Mar-16, 8:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 411

மேலே