என்ன ஆயிற்று இந்த பெற்றோர்களுக்கு
என்ன ஆயிற்று இந்த பெற்றோர்களுக்கு...???
--------------------------------------------------------------------
" நான் என் பையனை கான்வென்ட்ல தான் சேர்ப்பேன்.... அதுவும் ப்ரீ. கேஜி... " மெருமிதம் இந்தக் காலத்து அம்மாக்களுக்கு.... இருக்கட்டும் ... ஆனால் 2 வயதிலேயே குழந்தைகளை கொண்டு சென்று எங்கோ தள்ளி இருக்கும் பள்ளியில் தான் சேர்க்க வேண்டுமா? பக்கத்தில் இருக்கும் பள்ளியில் சேர்த்தால் என்ன என்று எனக்கு புரியவில்லை.... 6வ்து வரைக்கும் படிக்கட்டுமே...!
இது கூட பரவாயில்லை ..... பெற்றோர் தன சிறு வயதில் என்ன படிக்க வேண்டும் என கனவு கண்டனரோ, ஏதோ ஒரு காரணத்தால் தான் படிக்க முடியாமல் போனதை தன பிள்ளையோ, பெண்ணோ படித்தே தீரவேண்டும் என்பதில் வெறியுடன் இருப்பதை என்ன சொல்ல...?? . அவர்களுக்கு இருந்த ஆசை, பசங்களுக்கும் இருக்குமாயின் அது உத்தமம்... இல்லை என்றால் அதனை பிள்ளைகள் மேல் திணிப்பதில் அர்த்தம் இல்லை... அது தவறும் கூட...
இன்று இந்த இன்ஜினியரிங் மோகம் அதிகமாய் உள்ளது... சற்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை இன்று ...உடனடியாக சமூக ஆள்வளர்கள் , ஊடகங்கள் , கல்வி நிறுவனங்கள் செயல் பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது...
பிள்ளைகளுக்கு இந்த இன்ஜினியரிங் படிப்பில் இஷ்டம் இல்லை என்று தெரிந்தும், அதன் மேல் வெறுப்பு என்று உணர்ந்தும் அதனை ஏன் அவர்கள் மீது சுமத்துகின்றனர் பெற்றோர் ! கல்வி என்பது ஒருவர் மீது கட்டாயத்தில் வருவது அல்ல.... விருப்பம் என்பது முக்கியம்...
பல்வேறு நிகழ்வுகளில் இந்தக் கட்டாயத்தால் தற்கொலை வரை சென்றுள்ள பல செய்திகளை காணும் பொழுது நெஞ்சம் துடிக்கின்றது.... இதில் தவறு பெற்றோர் மீதும் உள்ளது. பிள்ளைகள் மீதும் உள்ளது.... தற்கொலை செய்யும் துணிவு இருக்கும் ஒருவன் தன விருப்பத்தையும் தைரியமாக வெளிப்படுத்தலாம்...
பெற்றோரே.... தயவு செய்து நிதானமாகவும், அறிவு பூர்வமாகவும் பிள்ளைகளிடம் கலந்தாலோசித்து அவர்கள் எதிர் காலத்தை வழி நடத்துங்கள்....உங்கள் எதிர்காலம் அவர்கள் கையில் தானே உள்ளது.... சிந்தியுங்கள்....பிள்ளைகளின் விருப்பம், கனவு, லட்சியம் , கலை ஆர்வம் இவற்றிற்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்கள்...
நன்றி மீண்டும் சந்திப்போம்....
மைதிலி ராம்ஜி