பெண்ணே எதை கண்டு இச்சை கொண்டாய்

பெண்ணே!
எதை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே ..
என் கண்ணே ! பெண்ணே !
நீ அவனிடம் எதை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே ..
என் கண்ணே பெண்ணே நீ அவனிடம்
எதை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே

தீபோல் சிவந்த தோல் கண்டா ..
நீர் போல் ஓடும் நடை கண்டா
பால் போல் தெரியும் முகம் கண்டா
பாழாய் போன பருவம் கண்டா
எதை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே

சுருக்கது போடும் சுந்தர விழி கண்டோ
சறுக்கி விழுந்தனை சொல்லடி என் மகளே..
குத்தும் அம்பு போல் குறு மீசை கண்டோ
முற்றும் மயங்கினை சொல்லடி பூமணியே ...
எதை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே

துணிகாயும் கொடியல்ல தொப்புள்கொடி
அதை விலை பேசி பெறுவாயோ தாலிக்கொடி
போடி போ தாண்டி போ - மகளே
நீ வளையாமல் ஓடும் நதி - உனை
அணைபோட்டு காப்பாற்ற நான் யாரடி ..
மதியுள்ள பெண்ணே போடி போ
தாய் மடிறங்கி போவதெனில் போடி போ ..
நீயும் நாளை தாயவாய் போடி போ ..
என் வலி அன்று நீ அறிவாய் போடி போ ...மகளே
எதை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே

சங்கீத தோட்டம் இட்டு சப்தசரமூட்ட
கள்ளிகாட்டுக்குள் குடிபோக நினைத்தாயோ
போடி போ ..தாண்டி போ ..
தங்க கோட்டை கட்டி தவமிருந்து நான் ஏங்க
தவிட்டு பானையிடம் தஞ்சமென விழ்வாயோ
சிலந்தி வலை கட்டி சிறப்பாக
வாழ்வதெனில் கிளம்பி இப்போதே நீ போடி போ ...
இலந்தை மரம் மேலே இலவம் பஞ்சு
தேடுகிறாய் எழுக நீ இப்போதே நீ போடி போ ...
கண்மணியே என்னை தாண்டி போ ..
என் கண்ணீரில் ரத்தம் பார்த்து போ ... மகளே
எதை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே

அன்னை கொடுத்த முகம் அலுத்து போனதென
பின்னே வந்த கரம் நீ பிடித்து செல்வது போல்
போடி போ ..தாண்டி போ ..
வாரி வகிதேடுத்து வாஞ்சையாய் வளர்த்த மகள்
ஊர் வாரி தூற்றும்படி புகழ் சேர்த்து
சொல்வது போல் போடி போ ..தாண்டி போ ..
தகர தேரில் இப்போதே நகர்வலம் வருவதேனில்
தாராளம் இப்போதே நீ போடி போ .
நாகலோகத்தில் நலமாக வாழ்வதெனில்
அம்மா நீ இப்போதே நீ போடி போ ..
முடிந்தால் என்னை தாண்டி போ ..
நான் உடைந்தாலும் உனக்கென
போடி போ .. போ .. போ ..

- பாடல் வரிகள்..கேட்டது...

எழுதியவர் : பாடல் கேட்டது (15-Mar-16, 10:19 pm)
பார்வை : 1125

மேலே