சாதி என்பதே சகதிதான்

சாதி என்பதே சகதிதான்!

சாதியை வைத்து
நிறைய சாதித்திருக்கிறோமா?
நிறைய சாகடித்துதான் இருக்கிறோம்

கலப்புத் திருமணம்
கைக்கூடியது
மரணம்

சாதிக்காக
உயிர்களை கொள்பவனே
என்று உணரப்போகிறாய்?
சாதி என்பதே சகதியென்று!

மாணத்திற்காக
உயிரையே கொடுத்தவர்கள்தான்
தமிழர்கள்
உயிரை எடுப்பவர்களே
நீவீர் தமிழர்களா?

ஓடிப்போகிறார்கள் என்றால்
துரத்துகிறீர்கள் என்றுதானே
அர்த்தம்

துரத்துவதை விட்டுவிட்டு
தூரத்திலிருந்தாவது பாருங்கள்
எப்படி வாழ்கிறார்களென்று

ஓடிப்போய் விட்டார்களே
உறவுக்காரர்கள்,
ஊர்க்காரர்கள்
என்ன சொல்வார்களென்று
புலம்புகிறீர்களே,
என்று உணர்வீர்கள்?
எதையாவது
சொல்வதற்கு மட்டும்தான்
அவர்கள் இருக்கிறார்களென்று.

காதலர்கள்
கொலை செய்யப்பட்டால்
மனிதஉரிமை மீறலென்று சொல்லாமல்
மதஉரிமை மீறலென்று சொல்லி
சண்டை போடுப‌வர்கள்தான்
நம் அரசியல்வாதிகள்
இவர்களா
சட்டம் இயற்ற போகிறார்கள்?
இனியொரு
உயிர் போக‌மலிருக்க*

எழுதியவர் : சுகுமார் சூர்யா (17-Mar-16, 11:18 am)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
பார்வை : 71

மேலே