உயிர் உதிர் காலம்
மதமா மனமா மதமா மனமா
கேள்வி தொக்கி நிக்குதே
விதமா விதமா என்னை
புதைகுழி நோக்கி இழுக்குதே
அல்லா ராமா ஏசு
இருந்தா கொஞ்சம் பேசு
சத்தம் இல்லா யுத்தம்
நித்தம் நித்தம் பக்கம்
புத்தம் புதிதாய் பூத்த
பூவின் விழியிலும் ரத்தம்
பித்தம் மீறிய தலையில்
வாழக்கை என்ன அர்த்தம்
மனிதம் இல்லா ஊரில்
கடவுள் கூட தோற்கும்
உன் தாகம் தீரும் நேரம்
பூமி உதிரக்காடாய் போகும்
கோயில் காத்த ஊரு இப்போ
நாயும் நரியும் பேயும் பாரு
உனக்கும் எனக்கும் நடுவே
பல நூலில்லாத பாலம்
இது மூடம் என்னும் தூளில் இட்ட
புள்ளியில்லாத கோலம்
ஆண்டவன் தட்டிய மேளம் அது
ராகம் தப்பிய தாளம்
எங்கும் வேரைக்கிழிக்கும் ஓலம்
இது உயிர் உதிர் காலம்