நடமாடும் நதிகள் 43

1
குறுஞ்செய்தி
அனுப்புகிறான்
தபால்காரன்
2
ஆடாது அசையாது
திம்மென்று காவல்
பித்தளைப் பூட்டு
3
வானத்தில் பருந்து
கோழியின் இறக்கைக்குள்
குஞ்சுகள்
தாயன்பு
4
தமிழகம் வாவென்கிறது
முகாம் உள்வாங்குகிறது
அகதிகளாய்
5
வாழ்த்தும் வருகிறது
வாழ்கையும் வருகிறது
அரசு இலவசம்
6
குளம் வற்றுவது பார்த்து
சிரிக்கிறது கொக்கு
மீன்கள்
7
நல்லதும் கெட்டதும்
உரசலில் உறுதி
தீக்குச்சி
8
அணிலாடும் கிளையில்
மறைந்திருக்கும்
கனி
இரட்டிப்பு மகிழ்ச்சி
9
ஊருக்கு உபதேசம்
தனக்கு பரதேசம்
பயனற்ற பேச்சு
10
தாழப் பறக்குது விமானம்
பதுங்கு குழிக்குள் குழந்தைகள்
பயம்,

இயன்றவரை ஹைக்கூ நதியில் நாங்கள் ,

இக் கவிதை தொடர் எழுத ஊக்குவித்த கவிஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்ற்யும் வாழ்த்துக்களும்

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Mar-16, 12:36 am)
பார்வை : 335

மேலே