நட்பு

திருப்பிப் பார்த்தால் திகைப்பு
அறியாத இதயத்தின் துடிப்பு
புரியவில்லை இன்றும்
என்று அரும்பியதோ
வாழ்வில் நண்பா நம் நட்பு

நாளும் கண்டோம் பரபரப்பு
அங்கங்கு சில மூக்குடைப்பு
நாளும் கடந்ததும்
இன்றும் கண்டோம்
நெஞ்சில் நட்பின் இருப்பு

இருக்கும் இடம் கலகலப்பு
இருந்தும் கொடுத்த பல கடுப்பு
பிரிக்க பல இருந்தும்
இணைத்தது ஒன்று
நல்கும் நட்பின் சிறப்பு

- செல்வா

பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது

எழுதியவர் : செல்வா (22-Mar-16, 7:38 am)
Tanglish : natpu
பார்வை : 1246

மேலே