சில நேரங்களில்

சில நேரங்களில்.,
கடந்த துன்பங்களுக்கும்
நடந்த துயரங்களுக்குமான
காரணம் தெரியவருவதும் கூட
திகைப்பின் தருணங்கள் தாம் !!!

சில நேரங்களில்.,
தவறுக்கான பொறுப்பை
நான் ஏற்க தயாரெனினும்
தவறியதற்கான பொறுப்பை
நாம் ஏற்க முயலுவதில்லை !!!

சில நேரங்களில்.,
முடிந்தவைகளை முன்னிறுத்தி
முயலவே முடியாது என
எதிர்வரும் காலங்களை
எத்தனிப்பது
ஏற்புடையது அல்லவே !!!

சில நேரங்களில்.,
நிந்தித்த நிமிடங்களையும்
சந்தித்த நேரங்களையும்
சீர்பட பார்த்தால்
சிதறிய உறவுக்கான
சாரத்தையும் நமதாக்கலாம் !!!

சில நேரங்களில்.,
நிகழ்ந்தவைகளின் நிழல்களை
நினைவிலிருந்து நீக்கும் முயற்சியே
இனி நடக்கவிருக்கும்
நிஜங்களைக் கூட
நிலைக்கச் செய்யும் !!!

சில நேரங்களில்.,
ஒரு கையை
நான் உயர்த்த தயாரெனினும்
தயக்கம் கொள்ளக் காரணம்
ஓசைக்கான
உன்னுடைய மறு கையே...
மறு கையா....?
மறுப்பா.....?
மறைந்துள்ள மௌனம் களைப்பாயா ....??


--தாரணி தேவி

எழுதியவர் : தாரணி தேவி (21-Mar-16, 7:12 pm)
Tanglish : sila nerangalil
பார்வை : 730

மேலே