ஒத்தயடிப் பாதையில

ஒத்தயடிப் பாதையில
அத்தமக நெனப்பினில
சுத்திவறேன் வண்டியில
முத்துப்பெண்ணே முகம்காட்டு !

வாக்கப்படப் போறவளே
சீக்கிரமா வாயேன்டி
பாக்காம ஏங்குறேன்டி
தூக்கமின்றி தவிக்கிறேன்டி !

வயக்காட்டுக் காத்தெல்லாம்
மயக்கத்தக் கொடுக்குதடி
தயக்கமின்றி எட்டிப்பாரு
கயல்விழியால் காதல்பேசு !

சந்தயில சரக்குவித்து
அந்தியில திரும்பிடுவேன்
சுந்தரியே காத்திருடி
வந்திடுவேன் இனிப்போடு ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (23-Mar-16, 11:12 pm)
பார்வை : 125

மேலே