யாழ் ஆடுகளம் ---- பாட்டு-----------படித்தது

பாட்டு.. ஒரு பாட்டு..

பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....

(பாட்டு)

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு - அதை

எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு

தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு

தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு

(பாட்டு)

தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு - பெற்ற

தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு

பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு

பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு

(பாட்டு)

உறவு பார்த்து வருவதில்லை

உருவம் கண்டு பிறப்பதில்லை

நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு - நம்

இருவருக்கும் தெரிந்ததுதான்

காதலென்னும் பாட்டு

எழுதியவர் : (24-Mar-16, 12:25 am)
பார்வை : 59

மேலே