எண்ணம் இயக்கம் யாவும்

மழை தூரும் நேரம்
ஒரு குடைக்குள்ளே( நாம் )...
மேகம் நமை சேர்த்து வைக்க தூது சொன்னதோ...(மழையிடம் )

மயக்கத்தில் நானும்
மயங்கியே நீயும்
மாறி மாறி
முகத்தை பார்த்து பேசிக் கொண்டோமே...

ஊஞ்சல் கட்டி
ஆட
கயிர் தான் ( ஊஞ்சல் கட்டி ஆடும் கயிர் தான் நான்... காற்று தான் நீ...(என்னை இயக்குபவன் நீயே தானடா ))
நானும் கேட்டேன்...
உந்தன் நரம்பை அறுத்து
கட்டி
ஊஞ்சல் ஆட்டினாய்...

புல்லாங்குழல் நீ கேட்க
எந்தன் எலும்பை எடுத்து தந்தேன்...தருவேன்...
நாளும்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Mar-16, 5:39 pm)
Tanglish : ennm iyakkam yaavum
பார்வை : 92

மேலே