ஹைக்கூ -சொசாந்தி-

ஹைக்கூ -0-சொ.சாந்தி-0-

படிக்க இயலாத கவிதைகள்
கன்னங்களில்
கண்ணீர்..!

நிறைவேறாத நிறைய ஆசைகள்
நிறைவேற்றுகிறது
கனவுகள்..!

கனக்கும் கவலைகள்
கரைக்க நினைத்து தோற்கிறது
கண்ணீர்..!

ஒருவருக்கும் தலை வணங்காதவள்
ஒருவனிடத்தில் தலை கவிழ்ந்தாள்
நாணம்..!

ஒடுங்கிக் கிடக்கிறது
நிழல்
உச்சி வெய்யில்..!

எழுதியவர் : சொ.சாந்தி (27-Mar-16, 3:30 pm)
பார்வை : 204

மேலே