துளிப்பாக்கள் -0-சொசாந்தி-0-

துளிப்பாக்கள்
============
தாசியின் வியாபாரத்தில்
ஒன்றிரண்டு அழுகல்
"மாமூல்"..!
குற்றவாளிகளுக்கு இலவசம்
கூரையுடன் கூடிய உணவு விடுதி
சிறைச்சாலை..!
இரவு பகல் சங்கமத்தில்
பிரசவமாகிறது
நாள்..!
தலைதெறிக்க ஓடுகிறது
வீடுகளும் மரங்களும்
இரயில் பயணம்..!
வாகன சக்கரத்தில் நசுங்கி
மிரண்டு ஓடுகிறது
சாலைகள்..!!