சில கவித் துளிகள் - 5
வேண்டுபவர்களுக்கு கிடைப்பதில்லை
நிறம்பி வழிகின்றது
- அனாதை இல்லம்
அடித்தாலும் அணைத்தாலும்
அரவணைக்கும் தாய்
- நிலமகள்
உருவாகும் முன்னே
உருகுலைக்கப் படுகின்றது
- கருக் கலைப்பு
கேட்டாலும் கேட்காவிட்டாலும்
கொடுத்தால் தான் மதிப்பு
- வரதட்சணை
முத்துக்கள் உதிர்கின்றன
அள்ள முடியவில்லை
- மழலையின் சிரிப்பு
இருள் சூழ்ந்தாலும்
கண்கள் மூடுவதில்லை
- நட்சத்திரம்
கவிதையாய் உலாவுகிறது
காவியமாய் வாழ்கிறது
- காதல்
தேய்ந்தே ஓய்ந்தாலும்
தன்னம்பிக்கையுடன் மீண்டும் வளர்வேன்
- நிலா
அள்ளி அள்ளி பருகினாலும்
என்றும் குறைந்துவிடுவதில்லை
- தாய் அன்பு
இணையாக செல்கிறோம்
இறுதி வரை இணையவே முடியவில்லை
- தண்டவாளம்