நட்பு ஹைக்கூ

இணைந்த இதயங்களின்
கோட்டில் நடக்கிறேன்
நட்புடன்.

****

என்றும் சண்டை, சச்சரவு
விலகவில்லை என்றும்
அருமை நண்பன்

***
பல கரித்துண்டுகளுடன்
சில வைரங்கள்
கூடா நட்புகளுடன் நல்நட்புகள்

****

நட்பு இங்கு அதிசயம்
பேசாமல் பேசுவார்கள்
எஸ்.எம்.எஸ்ஸில்

***

வேண்டும் நண்பன் இதற்கு முன்
தூரமாய் நண்பன் இதற்குப் பின்
காதலுக்கு

***
இரயில் பயணமா
நெடுநாள் பயணமா வேண்டும்
நல்ல நண்பர்கள்

- செல்வா

எழுதியவர் : செல்வா (26-Mar-16, 7:25 am)
Tanglish : natpu haikkoo
பார்வை : 1874

மேலே