நடமாடும் நதிகள் 50 – கார்த்தி
ஏர் பின்னே உலகம்
சகதிக் காலோடு உழவன்
தள்ளி வைத்தார்கள் !
களைகளுக்குள்ளே களை
நஞ்சுச் செடிக்குள்ளே நற்பயிர்
தனி ஒருவன் சரியா ?
பூக்கும் ஜாதிப்பூ
வீரம் கலந்த ரத்தபூமி
ஜப்பானில் செரிப்பூ !
ஆறு அதன் போக்கில்
ஆறிடுமா அதன் உள்காயம்
எவர் கல் எறிந்தாரோ ?
கண்ணடி கூடாது
கண்ணாடி முகம் பார்க்காதே
நீரில் விழுந்தது நிலா !
ஜோடி சேரவில்லை
நிலா, சூரியன் வேறு வர்ணம்
வானிலும் வர்ணங்கள் !
களவு போகிறது
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
காவலுக்கு முதியவர் !
நிழல் தந்த மரம்தான்
பட்டுப்போய் பாசமும் விட்டது
வயோதிகம் வேண்டா வரம் !
அனல் தெறிக்கும் ஆதவன்
அந்தியிலே ஓய்ந்து விட்டான்
ஊட்டசத்து குறைவு !
விலை போகும் உயிர்கள்
ஜீவன் உடுத்த ஜீவன்கள்
பளபளக்கும் பட்டுகள் !