சுகமான காதல் காத்திருப்பு

நீ இருந்தாய் எட்டா உயரத்தில்
உன் நிழலினை கொண்டேன் துணையாய்!!

உனை தீண்டிய காற்று எதுவாயினும்
எனை அடைந்தால் அறிவேன் நிச்சயமாய்!!

நீ பேசிய வார்த்தைகள் அனைத்தும்
என் மனதில் கோர்த்தேன் இசையாய்!!

உனை தேடியே சென்றன நாட்கள்
எனை நானே மறந்தேன் சுத்தமாய்!!

நீ உன் தேடலை நோக்க
என் வாழ்வை உணர்ந்தேன் தூரமாய்!!

உனை நீங்கிய தருணம் அனனத்தும்
எனை சேர ஆகினேன் பாலைவனமாய்!!!

நீ நித்தமும் தோன்றினாய் கானல்நீராய்
என் தாகம் தீர்த்தேன் முற்றிலுமாய்!!

உனை கொண்டேன் இதயக் கோவிலென
எனை நானே ஆக்கினேன் சேவகியாய்!!

நீ என்னுடன் இணையும் தருணமறிவேன்
என் வாழ்வுதோறும் காத்திருப்பேன் சுகமாய்!!

எழுதியவர் : ரசிகா (28-Mar-16, 5:33 pm)
பார்வை : 129

மேலே