சொல்லடி உன் பதில்
விழிகளின் மொழி காதல்
தனிமையின் மொழி புலம்பல்
அழகின் மொழி கவிதை
அடிபெண்ணே உன்மொழி மௌனமா ???
கானலும் ஒருவித பனித்துளி
பனித்துளியும் ஒருவித கானல் நீர்
என் மௌனம் என்பது தயக்கம்
உன்மௌன அர்த்தம் சொல்லடி ???
கோபம் கூட நேசம்
அழுகை கூட ஆயுதம்
மௌனம் கூட நரகம்
உன்னில் என் காதல் ??????