பயம்
வில்லன் போன்ற தோற்றத்தோடு -
வீதி எங்கும் தேடினேன் !
கண்ணில் பட்ட மனிதரிடம் -
கர்வத்தோடு கேட்கிறேன் !
"யார் நீ ?" எனும்போது :
இந்து என்கிறான் !
அடுத்தவனை பார்க்கிறேன் ;
முஸ்லிம் என்கிறான் !
மீண்டும் ஒருவனை கேட்கிறேன் ;
கிறிஸ்டியன் என்கிறான் !
கடைசிவரை தேடினேன் ;
மறைந்து போன மனிதனை !
கிடைக்கவில்லை பாரினிலே :
பார்த்தால் சொல்லுங்கள் !