தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்- 54

வண்ண மைவிழியாள் வந்தாள் என்னருகே
சங்க தமிழ்கற்று தாரேன் தனிமையிலே...!
சின்ன இடையழகாள் சிரித்தால் ரசகுல்லா
சுவைக்க நானிருக்கேன் சுந்தர தமிழ்மகளே..!
இது - நிஜம் நிஜம் நிஜம் – காதல் சாம்ராட்ஜியம்..!

தோகை மயிலாளே தொங்கும் தோட்டம் பாராயோ
தோலோடு தோல்சேர்ந்து தோகை விரித்தாடாயோ
தேடும் விழிகளிலே நீயே நிறைந்திருக்க
நாடும் நெஞ்சத்தில் வாடி குடி புகுந்திருக்க….

மேடு பள்ளங்கள் வாழ்வினில் சரிசமம்
மேன்மை அடைந்திட காதல் உதவிடும்
உண்மை வெளியாகும் ஒன்று உண்டென்றால்
அது இளமை விளையாடும் காதல் சொளபாக்கியம்!
இது - நிஜம் நிஜம் நிஜம் – காதல் சாம்ராட்ஜியம்!


தடாக தாமரையின் மறு பிறவி நீதானோ
தவிக்கும் என் நெஞ்சத்தில் தவழ்ந்தாடி மலராயோ
வேதியல் மாற்றத்தால் விளைந்தவள் நீதானோ
என் ஆவியில் புகுந்து இரண்டற கலப்பாயோ…!

கொண்டை பூவழகி உன் கொலுசு எனை மயக்கி
கிண்டல் செய்கிறது..! ஆனால் கீழ்ப்பாக்கம் போகாது..;
தொண்டை சிறுத்தவளே காதலை உரைப்பாயே
காதலைவிட பேரின்பம் வேறெதுவும் கிடையாதே
இது - நிஜம் நிஜம் நிஜம் – காதல் சாம்ராட்ஜியம்..!

எழுதியவர் : சாய்மாறன் (30-Mar-16, 7:22 am)
பார்வை : 53

மேலே