அறிவியலே
குறும்பான பார்வைக்கு
என்னதான் அர்த்தமோ-அந்த
அறும்பான பேதைக்கு
எவர்தான் பிடிக்குமோ?
சேராத மங்கல்யான்
சேர்ந்துவிட்டு போகுமோ - அந்த
சாயாத அக்னிதான்
சற்றென்று வந்திடுமோ??
போடாத பொக்ரான்கள்
பார்த்தவுடன் வெடிக்கிதே - நீ
போயென்று சொன்னாலே என்னில்
ஆட்டம்பாம் சிதறுதே!!
கால்கொலுசு ஓசைக்காய்
கண்டங்கள் தவிக்குது - உந்தன்
கம்மலின் சிணுங்களுக்கு
கன்னிவெடி சிவக்குது!!
ஒருபார்வை வீசிவிட்டால்
ஒருராக்கெட் பறக்குமே - மனதில்
ஒவ்வொன்றாய் பல
செயற்க்கைகோள் விரியுமே!
அணுக்களும் பிரிவதற்க்கு
அடங்களே பிடிக்கும் - உந்தன்
மேனிவிட்டு பிரிவததென்றால்
மாண்டுதான் போகும்!!
ஒளிகளும் ஒளிவதற்க்கு
ஒருகாரணம் நீதான் - உன்னை
தொட்டவுடன் ஒளிவதால்
அதற்குபல யோகம்தான்!
காரணமே இல்லமால்
கண்டபடி கிறுக்குகிறேன் - நான்
காதல் வைத்து உன்னை
கவிதையில் அலங்கரிக்கிறேன்!!