விரோதம்
புள்ளிக்குள்
புகுந்துகொண்டது
வண்ணம்
நீலத்தைத் தேடுகிறது
வானம்
******
ஊற மறுத்தது
ஊற்று
தாகத்தில் தவிக்கிறது
தண்ணீர்
*********
விரல்களுக்குள்
விதண்டாவாதம்
கை கொடுக்கவில்லை
கை
*********************
அவநம்பிக்கை அஸ்திவாரம்
இயலாமைக் கூரை
கிரகப் பிரவேசம் செய்யும்
தோல்வி
**************
சூரியனைப்
பிழிந்து குடித்தது விளக்கு
வெளுக்கவில்லை
கிழக்கு
**************
பொருந்த மறுத்தன
பூவிதழ்கள்
பூமியில் வீழ்ந்தன
தேன் துளிகள்
*****************
சிறகு முளைத்ததால்
பறக்கமுடியவில்லை
கூட்டைக் குறை கூறாத
கிளி
***********************