வேலன் வருவானே

செந்தில் கடலோரம்
கந்தன் அரசாட்சி
சந்தப் புகழ்பாட
சொந்த மெனக்கொள்வான் !

ஆடும் அலைகூட
பாடும் அவன்நாமம்
கூடும் திருக்கூட்டம்
நாடும் அவன்பாதம் !

சீல மொடுபக்தி
கோல முடன்செய்தால்
நீல மயிலேறி
வேலன் வருவானே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Mar-16, 11:55 pm)
பார்வை : 83

மேலே