பழமொழிகளும் சொலவடைகளும் - ஏ வரிசை



ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.
ஏமாந்தவன் தொடையில் திரித்தது லாபம்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
ஏரி மடை என்றால் நோனி மடை (என்கிறார்)
ஏரி மேல் கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனானாம்.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்.
ஏழைக்கேத்த எள்ளுருண்டை.
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது.
ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
ஏன் நாயேன்னா எட்டி மூக்க நக்குமாம்.

எழுதியவர் : மூலம் : தமிழ் இலக்கிய வலை - (30-Mar-16, 7:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 127

மேலே