முதல் பிழை - மரபுக்கவிதை

பூமணியே மாதுளை புன்னகையே தாக்காதே
பாவனை முள்விழி பார்வையிலே காதல்
எனக்குள் அழகாய் இறக்காதே இன்ப
வேதனை நீயென்இதத் துடிப்பு
முதல் வெண்பா முயற்சி
முதல்முறை நேர் நிரை வாய்ப்பாட்டை பார்த்து பார்த்து கவி வடித்தேன்
அடிகளில் மோனை பட கொண்டு வந்தேன் ஆனால் எதுகை நயம் சேர்க்காமல் விட்டு விட்டேன்
பிழைகளை சுட்டி காட்டி திருத்தும் கருத்துகள் அன்பர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்