என்னுள் அவள்

என் கனவிலே நான் வரைந்த ஓவியம் அவள்
என் இதயத்தில் நான் செதுக்கிய சிற்பம் அவள்
என் உள்ளங்கையில் நான் கிறுக்கிய ரேகை அவள்
என் நாசியில் நான் நுகர்ந்த சுவாசம் அவள்
என் கண்களில் நான் பதித்த கருவிழி அவள்
இவைகளை விட்டு நான் பிரிந்து விட முடியும் என்றால்
உன்னை விட்டும் பிரிந்து விட முடியும்
ஏன் என் கண்களில் தூசியாய் விழுந்து என்னை கண் கலங்க வைக்கிறாய்
கலங்கினாலும் கரைந்து விட மாட்டேன்
நீ என் இதயத்தை சிதைக்கலாம் ஆனால் என் இதயத்தில் சிற்பமாய் இருக்கும் உன்னை சிதைக்க முடியாது
வாடி விடும் என்று தெரிந்தும் பூவை தலையில் வைத்து அழகு பார்ப்பவள் நீ
நீ பிரிந்து செல்வாய் என்று அறிந்தும் உன்னை என் இதயத்தில் சுமந்து அழுது கொள்பவன் நான்.
நான் நானாக இருக்கும் வரை தான் என் இதயத்தில் நீ நீயாக இருப்பாய்
என்னை மாற்றிவிடாதே
என்னுள் இருக்கும் உன்னை இழந்துவிடாதே .

எழுதியவர் : jonesponseelan (30-Mar-16, 8:50 pm)
சேர்த்தது : ஜோன்ஸ் பொன்சீலன்
Tanglish : ennul aval
பார்வை : 428

மேலே