ஏப்ரல் 01

நாட்காட்டி நீட்டிக் காட்டுகிறது
ஒன்னாந் திகதியை
உற்றுப் பார்த்த படியே
ஊமை மௌனமாய்
கண்ணீர் தாரை பொழிகிறான்..
தொண்டைக்குழிக்குல்
சிக்கித் தினரும் வார்த்தைகள்
பெருமூச்சில் தனழாகிறது
மௌனமே மொழியாகி
மொழிக்குள் மௌனமாகிறான் ..
இதே ஒரு நாள் பொழுதில்
எல்லை மீறிய தன் விளையாட்டின் உச்சத்தில்
உதிர்ந்து போன தாயின் உயிருக்குள்
ஊசலாடுகிறது இன்னுமிவன்
மனம்..
"கலண்டரின்" வழியே இவன் கடந்த காலம் மீள்கிறது

வேலைப் பழுவாய் வெளிநாட்டு பயணம் நாடி
புறப்படலானான்..
பார்த்துப் பார்த்து பத்திரமாய்
பவித்திரமாய் ஒவ்வொரு சாமான்களாய் அடுக்கி நிறப்பி வைக்கிறாள் அவன் "சூட்கேஸ்"
பெட்டிக்குள்...
ஒரு கண்ணில் புன்னகை தூறல்
மறு கண்ணில் ஏக்கமவனுக்கு
அவளுக்கோ இரு கண்களிலும்
கண்ணீர் தாரைகள்
பிரிவின் முதல் நாள் முகவரியது
சேலை நுனியில் கண்ணீரை இறக்கி வைத்து சேர்ந்து போய் பத்திரங்கள் சொல்லி வழியணுப்பி வைத்தவள்
அவன் பயணம் தொடர்ந்த வாகனம் கண்ணில் நுனிப் புள்ளியாய் தெரியும் தொலைவு வரை
வாசலிலே பார்த்து நிற்கிறாள்.,
அவள் கண்ககளில் நின்று அந்த ஒற்றைப் புள்ளியும் மறைந்து போக
உள்ளூட்டுக்குள் திரும்புகிறாள்

அன்றைய நாளை பிதற்றலுடன் கழித்தவள்
மறு நாள் பொழுது புலர
சூரிய ஒளி படர்ந்து வந்து ஜன்னல் கண்ணாடியில் பட்டவள் முகத்தில் தெரிக்க
விழியசைத்து எழும்புகிறாள்
மனமெழாமல்
நித்தம் விழித்துப் பழகிய மகன் முகம் காணாமல்
மனதுக்குள் அழுது தவிக்கிறாள்
அவன் முகம் மனக்காட்சியில்

பார்க்க முடியாத தூரத் தொலைவில்
இவள் அன்பும் அவன் அன்பும்
தொலைபேசித் தொடர்பில்
நீளக்கோடிட்டு உயிர்க்கிறது
இரு உயிரும் ஒரு வாள் முனையின் விளிம்பில் தலையிட்டு தகிக்கிறது ,
இப்படியே உறவு தொடர்ந்து
அன்பும் அதிகரித்து அலைகடல் தாண்டி
ஒன்றை ஒன்று சந்திக்கா பயணம்
ஜீவன்களுக்குள்

களைந்து விரண்டு கண்ணீரோடும் சிறு நகையோடும் கழிந்து போன மாதங்கள் கழிந்த படியே நகர
மகன் வரும் சேதி செவிகளுக்குள் சினுங்கி போகிறது செல்போன் மணியில்
ஆனந்த துளியாய் சில துளிகள் விழியோரம் அவளுக்கு,
அவன் விரும்பியுண்ணும் இனிப்புப் பண்டங்கள் இவள் கைவரிசையில் இன்று புது சுவை காண்கிறது வண்ணங்கள் மாறி கலர்கலராய் காட்சிக்கிறது...
அவன் வருகையை
அயல் வெட்டைக்கே எத்தி வைத்த அவள் இதழ்கள்
இதற சிரிப்பாள் நெழிந்தது, இப்படியே இரவு தன் கனவுக்குள்
அவளை போர்திக் கொண்டது
விடியும் வரை,

அதிகாலைப் பொழுது அவளுக்காகவென்றே விடிய
விடியற் கருமங்கள் செய்து முடித்தவள்
அடுப்பங்கரைக்குள் அடுத்த "காபி"க்காய் செல்ல கதறிக்கொண்டடித்த "செல்போன்" "ரிங்"
அம்மா என்றழைப்பதாய் அவள் காதுகளில் விழ
விரண்டோடி வந்து செல்போனை எடுத்தவள் "ஹெலோ" என்ற
ஒரு சொல்லில் மூச்சடங்கி போனாள்,அவன் வரும் நாளுமதுவே

அந்திப் பொழுதின் நெருக்கத்தில்
அவன் நிழல் அவனுக்கு முன்னதாய் வீட்டு வாசல்
வெளியோரம் படுகிறது
சின்னத் தயக்கம் மேனி சிலிர்க்கிறது என்றுமில்லா சனக்கூட்டம் வாசலையும் உள்ளூடையும் நிரப்பி கிடக்க காண்கிறான்..
உள்ளுக்குள் போகும் நொடிப் பொழுதில் மனம் ஆயிரம் கேள்விகளால் அலப்பரிக்கிறது

கலங்கிய மனதோடு திடமாக
நடுத்தின்னையை நோக்கி நகர்கிறான்
அவன் மனதோடு சேர்ந்து கைகளில் தாங்கி பிடித்திருந்த
பொருட்களும் தரையில் விழுந்து தவிடு பொடியாகிறது..,
அழ மொழியில்லா வார்த்தை சேர்த்து அம்மா என்று கதறியழுது
கட்டியணைத்து கண்ணீரால் நனைக்கிறான் அம்மாவின் கண்ணங்கள் மட்டுமே நணைகிறது உணர்வற்று நேரமான உடலொன்று அங்கு உறங்கிக் கொண்டு

அவனுக்காக அவள் பார்த்து பார்த்து செய்த இனிப்பு பண்டங்களும்
அவளுக்காக அவன் தேடித் தேடி வாங்கிய பொருட்களும்
ஓர் ஓரமாய் நின்னு அவனை புதினம் பார்த்து நகைக்கிறது
அவள் இறுதிக்காரியம் முடியும் வரை..
முடிந்து விட்ட பின் மூலைக்குள் முடங்கிக் கொண்டு அன்றைய இராத்திரிக்குள் தொலைகிறான்

கடைசியாய் அவள் கை பட்ட செல்போனின் சிதறல்கள் அவன் கண்களில் பட்டு கதை சொல்கிறது
"இன்றைய காலை உன் இறப்பு சேதி அம்மாவின் செவிகளில் எட்டியதென் மூலம் நீ முழுப் பிண்டமாய் வந்து நிற்கிறாய்
அவள் மூச்ச்டங்கிய பின் நீ மூர்ச்சிக்கிறாய் "
அவன் விளையாட்டின் உச்சம் விழிகளுக்குள் புகுந்து கண்ணீரையே திரும்பத் திரும்ப திருப்பிக் கொடுக்கிறது ...

ஏப்ரல் ஒன்னு முதன் முதலாய்
அம்மாவை ஏமாற்ற விளையாட்டாய் சிறு பொய் விபத்தொன்றில் அவன் உயிர் உதிர்ந்து போனதாய் நண்பனின் வாயால்
அவள் உயிர் உதிர்க்கும் பொழுதுக்கு செல்போன் மணியில் சேதி சொல்லி விடுகிறான்,
அவன்

ஏமாற்றாய் அவன் செய்த விளையாட்டால்
விழிகளுக்குள் வைத்து தாங்கிய தாயின் உயிர் கணப் பொழுதில் பிரிந்து அவன் வாழ்வையே
ரணமாக்கிய அந்த நாளை
எந்த ஏப்ரல் ஒன்னாலும் அவனால் மறக்க முடியாது
அவள் அன்போடு அவள் இறப்பும்
அவனுக்கு மறக்க முடியா ஒன்றாய் அவன் வாழ்வில் நிலையாய் செதுக்கப் பட்டு விட்டது

(ஏப்ரல் ஒன்று இன்னும் எத்தனை பேரின் வாழ்வில் இப்படி அழியா காயங்களை தந்ததோ....? தரப் போகிறதோ...?)

Mubarak Fathima Askiya

எழுதியவர் : M .F .Askiya (31-Mar-16, 8:28 pm)
பார்வை : 274

மேலே