டேய், நா எம் பேர மாத்திக்கப் போறேண்டா

டேய், நா எம் பேர மாத்திக்கப் போறேண்டா.
=============================
ஏண்டா திடீர்னு உம் பேர மாத்திக்க முடிவு பண்ணீட்ட?
==================================
இல்லடா எம் பேரு தமிழ்ப் பேரா இருக்கு. அத ஒரு சிறு மாற்றம் செஞ்சு இந்திப் பேரு மாதிரி மாத்திக்கறண்டா. ஏன்னா இப்பெல்லாம் இந்திப் பேர வச்சுக்கறதானே நாகரிகம், பண்பாடு, புதுமை. தமிழ் நாட்டை விட்டு வெளிய போன நம்ம தமிழ்ப் பேருங்களக் கேட்டாலே எல்லாம் மொகம் சுளிக்கறாங்கடா. நாம இந்திப் பேரா வச்சுட்டா அவுங்க நம்மள அவுங்கள ஒருத்தரா நெனச்சுக்கவாங்கடா.
=========================================
சரி நீ புதுசா என்ன பேர வச்சுக்கப் போற?
=============================
டேய் எங்க கொள்ளுத் தாத்தா பேரு கருப்பையா, தாத்தா பேரு கண்ணையா, என்னோட அப்பா பேரு பொன்னையா. எனக்கு மல்லைய்யா-ன்னு எங்க தாத்தா தான் பேரு வச்சராம். மல் – தூய தமிழ்ச் சொல்; மல் –ன்னா மற்போர் –ன்னு அர்த்தம். ”என்னடா உம் பேரு பழங்காலப் பேரு மாதிரி இருக்குது. அத மல்யா –ன்னு மாத்திக்கடா. அப்பத்தான் அது இந்திப் பேரு மாதிரி இருக்கும்”னு சொன்னாங்க. அதுவும் எனக்கு சரின்னு தோணுது. நா இன்னும் ஒரு வாரத்திலே எம் பேர மல்யா –ன்னு மாத்தி அரசிதழில் வெளியிடறதோட நாளிதழ்களிலும் எம் பெயர் மாற்றம் பத்தி விளம்பரம் கொடுக்கப்போறேன்.
=========================
நீ செய்யறது தாண்டா காலத்துக்கேத்த மாற்றம். நீ புத்திசாலிடா.
==========================
ரொம்ப நன்றிடா நண்பா ரோகித்.
===========================
Mallya is a common surname among Konkani speaking Gaud Saraswat Brahmins from Mangalore, Karnataka.
What does Mallya mean?
[ syll. mal-lya, ma-ll-ya ] The baby girl name Mallya is derived from Hebrew, Egyptian,French, and Latin origins. Mallya is a form of the African, English, Hawaiian, Spanish, Swahili, and Zuni name Malia.
= ROHIT (रोहित =The word "rohit" at its root signifies the color red. The color red is implicit. It is derived from Sanskrit, meaning "the first rays of the sun".
Red; The sun's red light; First rays of the sun
Boy
நன்றி: விக்கிபீடீயா , இண்டியாசைல்ட்நேம்ஸ்காம் & பேபிநேம்ஸ்பீடியாகாம்
==================================================================
சிந்திக்க, மொழிப் பற்றை வளர்க்கவும், மொழி சார்ந்த இனப்பற்றையும் வளர்க்கவும் . பிற மொழிகளின் பெயர் அறிய.