”நாந்தாண்டா முதலமைச்சர் வேட்பாளர்”, ”இல்லடா நா, நாந்தாண்டா முதலமைச்சர் வேட்பாளார்”

என்னண்ணே அங்கே ரண்டு ரவுடிங்க தெருவிலே கட்டிப் பிடிச்சு உருண்டு சண்டை போட்டுட்டு இருக்காணுக?
==
அட முத்து, திருந்திய ரவுடிகங்க எல்லாம் சேந்து தி.ர.மு.க –ங்கற கட்சிய ஆரம்பிச்சிருக்காங்க. அந்தக் கட்சிலே இருக்கற திருந்திய இரண்டு பிரபல ரவுடிகளுக்கிடையே முதல் அமைச்சர் வேட்பாளருக்கான கடும் போட்டியாம். அவுங்களிலெ ஒருத்தன் பேரு பன்னி பிரகாஷ் –சாம். இன்னொருத்தரு பேரு மின்னல் ராஜாக்கண்ணு –வாம். வா நாம இன்னம் கொஞ்சம் பக்கத்திலே போயி என்ன பேசிக்கிறாங்கன்னு கேப்போம்:
==
பன்னி பிரகாஷ்: ::::
டேய் ராசாக் கண்ணு எம் பேரு தான் அடிக்கடி பேப்பர்லியும் டி,வி செய்தியிலும் வெளியாகி இருக்குது. தமிழ் நாடே அறிஞ்ச பிரபல ரவுடியா இருந்தவன் நாந்தாண்டா. முதலமைச்சர் வேட்பாளரா நிக்கற தகுதி எனக்குத்தாண்டா உண்டு. நாந்தாண்டா முதலமைச்சர் வேட்பாளர். மரியாதையா நீ ஒதுங்கிப் போடா.
===
மின்னல் ராஜாக்கண்ணு:::::::
டேய் பன்னி பிரகாசு, தமிழ் நாட்டில் உள்ள திருந்திய ரவுடிகளிலேயே நாந்தாண்டா பெரிய கோடீஸ்வரன். நம்ம கட்சி தொடங்கப்பட்ட இந்த ஆறு மாசத்திலே பட்டி தொட்டியெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு நம்ம கட்சியின் வீச்சரிவாள் சின்னத்தை பொது மக்கள் எல்லாம் தெரிஞ்சுக்கற மாதிரி பிரச்சாரம் பண்ணி, பேனர் கட்டி, போஸ்டர் ஒட்ட வச்சு, பேப்பர்ல எல்லாம் விளம்பரம் பண்ணினேன்ங்கறத தமிழ் நாட்டு மக்களே அறிவாங்க. அதனால நம்ம திருந்திய ரவுடிகளின் முன்னேற்றக் கழகத்தின் (தி.ர.மு.க) முதல் அமைச்சர் வேட்பாளர்ன்னு அறிவிக்கற தகுதி எனக்குத்தாண்டா இருக்குது.
===
அதலெல்லாம் முடியாதுடா. நாந்தாண்டா நம்ம கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர்.
==
திருந்திய ரவுடிகள் இருவரும் தெருவில் புரண்டு சண்டையிட்டுக்கொண்டே வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். காவல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வரும் வரை அவர்கள் சண்டை தொடர்கிறது.
==
அரசியல், திரைத் துறை இரண்டிலும் சேர்ந்து சேவை செய்ய எந்தத் தகுதியும் தேவையில்லை.