ப்ரமோஷன்
முருகேசுவின் மேனேஜர் ஒரு நாள் தனக்குக் கீழே வேலை செய்யும் மூன்று பொறியாளர்களையும் கூப்பிட்டார்.
மேனேஜர் : உங்கள் வேலைத் திறனை ஆராய்ந்தபோது, மூன்று பேரும் ஒரே அளவில்தான் இருக்கிறீர்கள். இப்போ ஒரே ஒரு ஆளுக்குத்தான் ப்ரமோஷன் சான்ஸ் இருக்கு. அதனால இப்போ நான் ஒரு டெஸ்ட் வைக்கப்போரேன். அதுல யார் வின் பண்ணுறீங்களோ அவருக்குத்தான் ப்ரமோஷன். ஓகேயா? “
பொறியாளர்கள் : ஓகே சார்.
மேனேஜர் : ரொம்ப சிம்பிளான டெஸ்ட்டுதான். இப்போ நான் ஒரு நிறத்தோட பேரைச் சொல்லுவேன். அதைக் கேட்டதும் நீங்கள் எனது வலதுபக்கத்துக்கு வரணும். அப்புறம் ஒரு பழத்தோட பேரைச் சொல்லுவேன்; அப்போ நீங்க என்னோட இடதுபக்கத்துக்கு வரணும். சரியா செஞ்சா ப்ரமோஷன் இல்லைன்னா இந்த ஜென்மத்துல இல்லை. சரியா??? “
பொறியாளர்கள் : “சரி சார்…. “
மேனேஜர் : “ஆரஞ்ச்”

