மழலைக்கோர் மனவுரை

அறியாப் பருவ விளையாட்டாய்
தொடங்கும் உன் ஓட்டம்
பணத்தை நோக்கியோ
புகழை நோக்கியோ
துரத்துவதினாலோ
அல்ல
புரட்சியை நோக்கியோ
தொடர்கிறது...!
தேடல் நிறைந்த வாழ்க்கை
ஓடல் நிறைந்த வாழ்வாய்
மாறிப்போன உலகில்
இழுபறி நிலையாய் இழுத்துக்கொண்டே போகும்
அவசர ஆசைகளின் இம்சையில்
நீயேனும் ஆன்ம ஆசைகளை தேடு...!
உனது இந்த ஓட்டம்
வெற்றியை விதைக்காமல்
வேள்வியை கேள்வியை விதைக்கட்டும்...!
ஒரு மாளிகையை கண்பார்த்து ஓடாதே
உன் கண்பார்க்கும் குடிசையை
காரையாக மாற்ற ஓடு...!
இன்று விளையாட்டாய் தொடங்கும்
இந்த ஓட்டம்
விதையாக மாறட்டும்
விருட்சமாய் வளரட்டும்
அதன் வேர் சமூகத்தில் ஊடுருவட்டும்
இன்று உனக்கும் தேவை ஒரு புரட்சி...!
-படத்திற்கான கவிதை