தேனீ

மலரின் மகரந்த வாசம்
புலன் நுகரும் தன்மை
நீ கற்ற வித்தையோ..?
தேன் சேர்க்கும் கூடதுவும்
நீ செய்த தானியக் களஞ்சியமோ..?
காடுமேடு கரையெல்லாம்
காத தூர பயணமென்ன..?
நுனி நாக்கு தேனுக்கு - நீயும்
நூறு மைல் செல்வதென்ன..?
கால்சுளுக்கும் கொள்வதில்லை
மலரின் மகரந்த வாசம்
புலன் நுகரும் தன்மை
நீ கற்ற வித்தையோ..?
தேன் சேர்க்கும் கூடதுவும்
நீ செய்த தானியக் களஞ்சியமோ..?
காடுமேடு கரையெல்லாம்
காத தூர பயணமென்ன..?
நுனி நாக்கு தேனுக்கு - நீயும்
நூறு மைல் செல்வதென்ன..?